உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 17 மே, 2012

புரியாத செயல்


கர்ணகொடூரமாய் நிகழ்ந்துவிடுகிறது
இந்நாட்களில்
இதுபோன்றதொரு
சம்பவம்.......

எவ்வளவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளிவிடுகின்றது
புரிந்தவரின் புரியாத
இந்த செயல்...

இந்த செயலுக்குப் பின்
எதோ ஒரு வலியும்
மூர்க்கத்தனமும்
மூர்ச்சையாகித்தான் கிடக்கின்றது...

ஏமாற்றபட்டதன் வலியும்,
ஏமாந்துபோனதன் கோவமும்,
நீண்ட நேர நினைவுத்தேடலும்,
கண்ணீரில் கொண்டுவந்து
முடிக்கின்றது..

முடிந்ததாய் நினைத்திருந்த
வேளையில்,
நம் பலவீனங்கள்
பழைய பிரியங்களை
கண்முன்னே
பிரிந்துப்போடுகின்றது...

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.



21 கருத்துகள்:

ஆத்மா சொன்னது…

யப்பா இன்னைக்குத்தான் முதலாவதா வந்திருக்கிறேன் படித்திட்ரு வாரன் ....:)

ஆத்மா சொன்னது…

உண்மைதான்....உங்களுக்கு அப்பிடி எதும் நடக்கல்லியே...:)

ஆத்மா சொன்னது…

நல்லது....தொடருங்கள்

செய்தாலி சொன்னது…

வடுக்கள்
நினைவில் உயிர்த் எழுந்தாலும்
தூறிவிட்டு சொல்லும்
வலியை

கவிதை
வலியின் வன்மம்

Unknown சொன்னது…

உங்களின் உடன் வருகைக்கு மிக்க நன்றி சகோ...எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தில் இதுபோன்றதொரு பிரிவு நிக்ழ்ந்து தான் இருக்கும்....... :)

ம.தி.சுதா சொன்னது…

/////நீண்ட நேர நினைவுத்தேடலும்,
கண்ணீரில் கொண்டுவந்து
முடிக்கின்றது../////

பல தடவை புரட்சியாகவும் வெடித்திருக்கிறது சகோ..

அனைவருக்கும் அன்பு  சொன்னது…

உண்மைதான் ரேவா

உணர்ந்தவர்களால்

உணரவும் உணர்த்தவும் முடியும் ..........

நானும் உணர்ந்தேன் உங்கள் வரிகளில்

பூங்குழலி சொன்னது…

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.

அருமையான கவிதை

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.

கொந்தளிக்கும் உணர்ச்சிக்குவியல் !!!

Unknown சொன்னது…

செய்தாலி கூறியது...

வடுக்கள்
நினைவில் உயிர்த் எழுந்தாலும்
தூறிவிட்டு சொல்லும்
வலியை

கவிதை
வலியின் வன்மம்

புரிந்துணர்வோடு என்னை வளர்க்கும் உங்கள் மறுமொழி கண்டு மகிழ்ந்தேன் சகோ :)

Unknown சொன்னது…

♔ம.தி.சுதா♔ கூறியது...

/////நீண்ட நேர நினைவுத்தேடலும்,
கண்ணீரில் கொண்டுவந்து
முடிக்கின்றது../////

பல தடவை புரட்சியாகவும் வெடித்திருக்கிறது சகோ

உண்மை தான் சகோ புரட்சிகள் பலவும் கண்ணீரின் காரணத்தினாலே எழுதப்படுகின்றன.... மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..........

Unknown சொன்னது…

கோவை மு.சரளா கூறியது...

உண்மைதான் ரேவா

உணர்ந்தவர்களால்

உணரவும் உணர்த்தவும் முடியும் ..........

நானும் உணர்ந்தேன் உங்கள் வரிகளில்

என் தளத்தில் உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் கவிதைத்தோழி, தொடரட்டும் உங்களின் இந்த வருகை...

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

பூங்குழலி கூறியது...

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.

அருமையான கவிதை



மிக்க நன்றி தோழி உங்கள் முதல் வருகைக்கும், புரிந்துணர்ந்து நீங்கள் இட்ட மறுமொழிக்கும் :)

Unknown சொன்னது…

சே. குமார் கூறியது...

கவிதை நல்லாயிருக்கு.

மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...

பிரியமானவர்களின் பிரிவைவிட
பிரிந்தபின் அவர்களின்
பிரியமற்ற நினைவுகள்
தரும் வலியைவிட
கொடுமையான ஒன்று
இருந்துவிடுமா என்ன?
.

கொந்தளிக்கும் உணர்ச்சிக்குவியல் !!!

மிக்க நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும் அன்புக்கும் :)

Suresh Subramanian சொன்னது…

aam... privivu karnakoduramaanathu thaan.. arumai.. rishvan

ராஜி சொன்னது…

எவ்வளவு மென்மையானவற்றையும்
புறந்தள்ளிவிடுகின்றது
புரிந்தவரின் புரியாத
இந்த செயல்.
>>>
நம்மை புரிந்தவர்கள் நமக்கு புரியாத புடிக்காத செயல்களை செய்யும்போது வாழ்வே வெறுத்து போகும். நல்ல கவி படைட்து பகிர்ந்தமைக்கு நன்றி

Vijayan Durai சொன்னது…

உணர்வுப்பூர்வமான பதிவு,உருக்கமான பதிவு!

Unknown சொன்னது…

//முடிந்ததாய் நினைத்திருந்த
வேளையில்,
நம் பலவீனங்கள்
பழைய பிரியங்களை
கண்முன்னே
பிரிந்துப்போடுகின்றது...//

அருமை..